முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கே கிடைக்காத வசதி, வாய்ப்பு...அத வச்சி என்ன செஞ்கிட்டுருக்கோம்!


இந்த ஒரு மாசத்தில நாம ஒரு தடவையாச்சும் பொன்னியின் செல்வன்ங்கிற பெயரை உச்சரிச்சு இருப்போம். அதை படிச்சிருக்கோம் படிக்கல,  புடிக்கும் புடிக்காதுங்கிறத தாண்டி பேசியிருப்போம்.


நாம பொது சமூகத்தோட  இணைச்சிருக்கோம். இணைக்கப்பட்டிருக்கோம்னு தெளிவா தெரியுது. உடனே ஒரு விசயம் பேசு பொருள் ஆகுது. ஒரு காலத்தில் எம்.ஜியார் படமோ சிவாஜி படமோ அட அரசின் ஏதோ ஒரு அறிவிப்போ வந்தா தண்டோட போடணும்( தற்போது தடை செய்யப்பட்டுள்ளது)... அது பரவ எப்படியும் ஒரு வாரமாகும். இது நகரத்திற்கு. அட எம்.ஜியார் இறந்த செய்தி தமிழ்நாடு முழுக்க  அதாவது கடைக்கோடி கிராமம் வரை சென்று சேர  24 மணி நேரத்துக்கு மேல ஆச்சு.

இன்னைக்கு அப்படியில்லை. சுடச்சுட இன்னும் சொல்லபோனா மாவு ரெடி செய்யலாமானு அவங்க பேசும் போதே நாம தெரிஞ்சுக்கிறோம். 

அட, நானெல்லாம் சாதரண ஆள், என்னோட நண்பர் குழுகிட்ட ஒரு வயலின் வாங்கலாம்னு இருக்கேனு சொல்றேன், அது பற்றி பேசுகிறேன். ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு வயலின் வாங்க  சொல்லி கூகுளில் தானே விளம்பர தகவல் வருது.  பேஸ் புக் வந்தா.. வயலின் வகுப்பு விளம்பரம் வருது.

உலகம் இவ்ளோதான். இனி இப்படித்தான். ஒரு வகையில நல்லது. என்ன ஒரு ஆறுதல்னா.. இது கூடிய சீக்கிரம் போரடிச்சு போகும். ஏன்னே எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சு போச்சுன்னா வாழ்க்கையில சுவாரசியம் போய்டும்.

முன்னாடி டாம் & ஜெர்ரியை குழந்தைகள் டிவியில் அப்டி பார்ப்பார்கள். எங்கயாச்சும் கிளம்பிட்டு இருக்கும் போது டிவியில வந்துட்டா அப்டியே உக்காந்துடுவார்கள். இப்ப  அப்டியில்லை.நினைச்ச நேரத்தில அத பார்க்கும் வசதி இருக்கு. இது நல்லதா கெட்டதானு கேட்டா.. காலத்திற்கு அறிவியலுக்கும் இயற்கைக்கும் அதெல்லாம் தெரியாது. அது வேலைய அது செஞ்சுட்டே இருக்கும். முடிஞ்சா வாழ்ந்துக்கோ. இல்ல ஓரமா உக்காந்து அழு. இதான் தாரக மந்திரம்.

இப்ப நாம செய்ய வேண்டியது எல்லாம் ஒன்னு தான். இப்ப இருக்கிற இந்த வசதியெல்லாம் ஒரு காலத்தில  நம்ம (?) கடவுளுக்கே (??) கிடைக்காத வசதிகள் வாய்ப்புகள். அத வச்சி என்ன செஞ்சோம்ங்கிறது மட்டும் தான் நம்மோட வாழ்க்கை அறிவு இருக்கு.

முன்னோர்கள் முட்டாள்கள் இல்லைனு  இன்னைக்கு கொஞ்ச பேரு உயர்த்தி பிடிக்கிறாங்க. ஆனா நம்மள முன்னோர தூக்கி பிடிக்க அந்த கொஞ்ச பேரும் இருக்கமாட்டாங்க போல.. ஏன்னா அறிவியலையும் காலத்தையும் அப்படித்தான் பயன்படுத்திட்டு வரோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

விமான விபத்தில் மட்டும் அல்ல… சாலைகளிலும் கனவுகள் சிதைகின்றன!

 2023 ஆம் ஆண்டில் 17,526  சாலை விபத்துகளில் 18,347 பேர் இறந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை முறையே 18,074 விபத்துகளில் 17,282 உயிரிழப்பு ஆகக் குறைந்துள்ளது. இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கை.  ஆண்டுக்கு 17,000 ஆயிரம் என்றால் மாதத்திற்கு 1400 பேர்கிட்ட வரும். அதாவது விமான விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.  என்ன ஒன்று தலைப்பு செய்தியாக வராது. பத்திரிக்கையில் ஒரு ஓரத்தில் வரும்.  அதனால் நமக்கு தெரியவில்லை. மற்றபடி விமானத்தில் இறந்தவர்கள் போல இவர்களுக்கும் கனவுகள் குடும்பங்கள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் இருப்பார்கள். ஆனால் நாம் அதற்கு நாம் உறுகியதே இல்லை. காரோ பைக்கோ நாம் வேகமாக செல்ல வாங்கவில்லை. சொகுசாக செல்ல வாங்கி இருக்கிறோம். இங்கே போக்குவரத்திற்கு பேருந்து ரயில் எல்லாமே இருக்கிறது எல்லா ஊர்களுக்கும். ஆனால் நாம் அது கொஞ்சம் அலைச்சல் என சொந்த வாகனங்களில் போகிறோம். இதனை மனதில் வைத்தாலே போதும். பாதி குறையும். அடுத்து தொலைதூரங்கள் சென்று உடனே திரும்ப வேண்டியது இருந்தால் ஆக்டிங் டிரைவர் போடலாம். அதுவும் செய்ய மாட்டோம்.  அந்த பணத்தை மிச்சம் செ...

பா.ம.க. : நம்ம குடும்பம் vs என் குடும்பம்

 பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவிக் கொண்டு இருப்பது ஒரு சாதாரண குடும்பப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இது ஒரு தேர்தல் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி. அன்புமணி அவர்களின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்ற செயல்பாடுகள் மட்டுமே எடுத்துப் பார்த்தாலே, அந்தக் கட்சி யாருக்காக இயங்குகிறது என்பது நமக்கு புரிந்து விடும். ராமதாஸ் பேசுவது போல, அவருடைய கூற்றுகளில் பாதி விஷயங்கள் இந்த சமுதாயத்துக்கு தேவையற்றவை. இப்போது அந்தக் கட்சியில் நடப்பது இரு கோட்பாடுகளுக்கிடையிலான மோதல்தான்: "நம்ம" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என பெரியவர் விரும்புகிறார். "என்" குடும்ப கட்சியாக இருக்கட்டும் என சின்னவர் விரும்புகிறார். அவ்வளவுதான். மேடையில் அன்புமணியின் மகன் முகந்தன் குறித்து எழுந்த கேள்விகள் உண்மையில் நியாயமானவை. “கட்சியில் சேர்ந்தே நாலு மாதம் தான் ஆகுது. அவனுக்கு ஏன் அந்த பதவி? கட்சியில் வேறு யாராவது நல்லா வேலை பார்த்தா அவர்களை ஏன் நியமிக்கக் கூடாது?” என்ற கேள்வி அவரது நாடாளுமன்ற உறுப்பினர் அளவில் எழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி அப்போது ஏன் கேட்கப்படவில்லை என்று நாம் கேட்கத் தேவையி...